திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > பிரீமியர் லீக் – புதிய சாதனையைப் படைத்தது மென்செஸ்டர் சிட்டி !
விளையாட்டு

பிரீமியர் லீக் – புதிய சாதனையைப் படைத்தது மென்செஸ்டர் சிட்டி !

மென்செஸ்டர், டிச.14 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி தொடர்ந்து அதிரடிப் படைத்து வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 4 – 0 என்ற கோல்களில் சுவான்சி சிட்டியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஒரே பருவத்தில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றிப் பெற்ற முதல் கிளப் என்ற பெருமையையும் மென்செஸ்டர் சிட்டி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 2002 ஆம் ஆண்டில் அர்செனல் அணி தொடர்ச்சியாக 14 ஆட்டங்களில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

முதல் பாதி ஆட்டத்தின் 24 ஆவது நிமிடத்தில் டாவிட் சில்வா மூலம் மென்செஸ்டர் சிட்டி தனது முதல் கோலைப் போட்டது. 7 நிமிடங்களுக்குப் பின்னர் கேவின் டி புரூன் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார். இரண்டாம் பாதி ஆட்டத்தின் 54 ஆவது நிமிடத்தில் டாவிட் சில்வா மூன்றாவது கோலைப் புகுத்தினார்.

ஆட்டம் முடிவடைய ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது மென்செஸ்டர் சிட்டியின் நான்காவது கோலை செர்ஜியோ அகுவேரோ போட்டார்.இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள மென்செஸ்டர் யுனைடெட்டைக் காட்டிலும் 11 புள்ளிகளில் மென்செஸ்டர் சிட்டி முதலிடத்தில் உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன