அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > பிரீமியர் லீக் – போர்னிமோத்தை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்!
விளையாட்டு

பிரீமியர் லீக் – போர்னிமோத்தை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்!

மென்செஸ்டர் , டிச.14 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் புதன்கிழமை ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 1 – 0 என்ற கோலில் போர்னிமோத்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

போர்னிமோத்துக்கு எதிரான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டின் ஒரே கோலை 25 ஆவது நிமிடத்தில் ரொமேலு லுக்காகூ போட்டார். அந்த கோலானது இந்த பருவத்தில் லுக்காகூ போட்டிருக்கும் 14 ஆவது கோலாகும். ஒரு கோலைப் போட்ட பின்னர் மென்செஸ்டர் யுனைடெட் சீரற்ற ஆட்டத்தரத்தையே வெளிப்படுத்தியது.

சொந்த அரங்கில் விளையாடினாலும் ஆட்டத்தை முழுமையாக ஆக்கிரமிப்பதில் மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி கண்டது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் போர்னிமோத் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டாலும் மென்செஸ்டர் யுனைடெட் அந்த ஒரு கோலை தக்க வைத்து வெற்றி பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன