புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > 340 கோடி வெள்ளி பிடிபிடிஎன் கடன் தொகை வசூலிப்பு
மற்றவைமுதன்மைச் செய்திகள்

340 கோடி வெள்ளி பிடிபிடிஎன் கடன் தொகை வசூலிப்பு

கோலாலம்பூர், டிச. 14-
உயர்கல்வி நிலைய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி கடனுதவியை திரும்ப பெறுவதில் பல்வேறு அணுகுமுறைகளை கையாண்டுவரும் பிடிபிடிஎன் கடனுதவி கழகம் கடந்த அக்டோபர் மாதம் வரையில் சுமார் 340 கோடி வெள்ளியை வசூலித்துள்ளதாக உயர்க்கல்வித்துறை துணையமைச்சர் டத்தோ டாக்டர் மேரி யாப் கைன் சிங் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு 150 கோடி வெள்ளி மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இத்தொகை 340 கோடி வெள்ளியாக உயர்ந்துள்ளதாக பிடிபிடிஎன் நடத்திய ‘விவாதிக்கலாம் எனும் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு 390 கோடி வெள்ளி கல்விக் கடனுதவிக்கு வழங்கப்பட்டது. ஆனால், அக்டோபர் மாதம் வரையில் 300 வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் வரையில் கல்வியில் முதல்நிலை தேர்ச்சி அடைந்த 4,454 மாணவர்களுக்கு பிடிபிடிஎன் கடன் விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 2,733 பேர் அரசு உயர்க்கல்விக் கூடங்களைச் சேர்ந்தவர்கள். 1,812 பேர் தனியார் உயர்க்கல்விக் கூடங்களை சேர்ந்தவர்கள் என மேரி யாப் தெரிவித்தார்.

உயர்கல்வி முடிந்து 18 மாதங்களுக்குப் பின்னரும் பிடிபிடிஎன் கடனை செலுத்தாதவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படாதது இறுதிக் கட்ட நடவடிக்கை என மேரி யாப் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன