அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மலேசிய அஜித் நற்பணி மன்றத்திற்கு இயக்குநர் வெங்கட்பிரபு வாழ்த்து!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய அஜித் நற்பணி மன்றத்திற்கு இயக்குநர் வெங்கட்பிரபு வாழ்த்து!

கோலாலம்பூர், டிச, 15-

மலாக்கா, பம்பானிலுள்ள லாடாங் புக்கிட் காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு நிதி திரட்டும் நோக்கில் மலேசிய தல அஜித் இரசிகர்கள் மன்றம் 2ஆவது ஆண்டாக வாகன அணிவகுப்பை ஏற்பாடு செய்துள்ளது.  இந்த நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் மாதம் 16ஆம் தேதி காலை மணி 8.00 அளவில் நடைபெறவிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற வேண்டுமென பல பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டு வருகிறார்கள்.

தல சேரிட்டி கான்வேய் 2 எனும் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க மலாக்கா, பம்பானிலுள்ள லாடாங் புக்கிட் காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு நிதி திரட்டும் நோக்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த போது நல்ல வரவேற்பு தல இரசிகர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கிடைத்தது. அதிலிருந்து கிடைத்த நிதியின் வாயிலாக நெகிரி செம்பிலானிலுள்ள தம்பின் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுக்கு பள்ளி உபகரண பொருட்கள், அகராதிகள், பள்ளியின் நூல்நிலையத்திற்கு தேவையான நூல்களை வழங்கினோம். அதுமட்டுமின்றி, அப்பள்ளியின் நூல்நிலையமும் தூய்மைப்படுத்தப்பட்டது.

இரண்டாவது முறையாக நடத்தப்படும் இந்த அணிவகுப்பின் மூலம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலனடைகிறார்கள் என்பது மிகப் பெரிய மகிழ்ச்சி என கங்கை அமரனின் புதல்வருமான வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட அற்புதமான நிகழ்ச்சிக்கு மலேசியர்கள் முழுமையாக ஆதரவு வழங்க வேண்டுமென வெங்கட்பிரபு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வேளையில் தாம் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதோடு, இம்மாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக வெங்கட்பிரபு கூறினார்.

முன்னதாக தல அஜித் நடித்த 50ஆவது திரைப்படமான மங்காத்தாவை வெங்கட்பிரபுதான் இயக்கினார். மிகப் பெரிய வசூல் சாதனை புரிந்த இத்திரைப்படம் அஜித் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகின்றது. சென்னை 28 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய வெட்கட்பிரபு, அதன் பிறகு இயக்கிய சரோஜா திரைப்படமும் வெற்றி பெற்றது. கோவா திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் மங்காத்தா மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

பின்னர் பிரியாணி, மாஸ் போன்ற திரைப்படங்களை இயக்கிய வெங்கட்பிரபு, மீண்டும் சென்னை 28 (2) திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்குத் திரும்பினார். இப்போது பார்ட்டி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைய மலேசிய தல அஜித் ரசிகர் மன்றத் தலைவர் தேவேந்திரன் உட்பட அனைவரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள்.

மேல்விவரங்களுக்கு முகநூலில் Malaysia Thala Ajith Fan Club மலேசிய தல அஜித் ரசிகர் மன்றம் பக்கம் வாயிலாகவும் டூவிட்டரில் @Thalafansml பக்கம் வாயிலாகவும் 012-259 4183 என்ற தொலைப்பேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன