அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சமந்தாவுடனான என் வாழ்க்கை – நாகசைதன்யா
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சமந்தாவுடனான என் வாழ்க்கை – நாகசைதன்யா

”எங்களுக்குள் எப்போது காதல் வந்தது என்று தெரியவில்லை” என்று கூறி வலம் வந்த நாகசைதன்யா – சமந்தா ஜோடி அண்மையில் கோலாகலமாக தங்களின் திருமணத்தை முடித்தனர்.

திருமணத்திற்கு பிறகும் சமந்தா, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நாகசைதன்யாவும் தன் படங்களில் பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில், ஐதராபாத்தில் நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாகசைதன்யாவிடம், திருமண வாழ்க்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது பேசிய அவர், எனது நீண்டகால காதலி சமந்தா. அவரை திருமணம் செய்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்களது திருமண வாழ்க்கை சந்தோசமாக போய்க்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன