புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தோள்களில் பலம் உண்டாக எனது வாழ்த்துகள் – கமல்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தோள்களில் பலம் உண்டாக எனது வாழ்த்துகள் – கமல்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றுக்கொண்ட ராகுல்காந்திக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, மன்மோகன்சிங் போன்றனவர்கள் நேரில்  வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் டுவிட்டருக்கு பிரபலமான நடிகர் கமல்ஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்திக்கு தமது  வாழ்த்தினை ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார்.
அவர் தனது டுவிட்டரில், ‘ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் பதவி உங்களை வரையறுக்காது, ஆனால் அதே நேரத்தில் நீங்கள் உங்களது நிலையை வரையறுக்க முடியும். உங்கள் மூதாதையர் மீது நான் பெரும் மரியாதை வைத்துள்ளேன்.  அதேபோல் நீங்களும் நான் மதிக்கும் வகையில் உழைத்து அனைவரையும் நல்வழிப்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் தோள்களில் பலம் உண்டாக எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
வழக்கம்போலவே, கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன