திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > எரிபொருள் விலையை நாள்தோறும் அறிவிக்க அரசாங்கம் எண்ணமா?
முதன்மைச் செய்திகள்

எரிபொருள் விலையை நாள்தோறும் அறிவிக்க அரசாங்கம் எண்ணமா?

கோலாலம்பூர், ஜூலை 22
நாள் அடிப்படையில் எண்ணெய் விலையை நிர்ணயிக்க அரசாங்கம் தற்போது எண்ணம் கொண்டிருக்கவில்லை. தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை வாராந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது.

உள்நாட்டு வாணிப, கூட்டுறவு, பயனீட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் இதற்கு முன்னர் பரிந்துரைத்த எரிப்பொருள் விலை நிர்ணயிக்கும் நடைமுறை முழுமையாக ஆராயப்பட்டதோடு அதனைச் செயல்படுத்த அவகாசம் தேவைப்பட்டதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.

வாராந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் எண்ணெய் விலை முறையை ஒருங்கிணைக்க உள்நாட்டு வாணிப, கூட்டுறவு, பயனீட்டு அமைச்சுக்குப் போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

நாள் அடிப்படையில் எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் முறைக்கு மாற எண்ணெய் நிலைய உரிமையாளர்களும் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். மக்கள், எண்ணெய் நிலைய உரிமையாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில் சிறந்த முடிவு எட்டப்படும் வரை வாராந்திர அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தொடரப்படும் என ஜொஹாரி குறிப்பிட்டார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன