புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பெல்டா நில விவகாரம்: முழுமையான விசாரணை தேவை!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பெல்டா நில விவகாரம்: முழுமையான விசாரணை தேவை!

பெட்டாலிங் ஜெயா, டிச. 22-
தலைநகரிலுள்ள ஜாலான் செமாராக்கில் பெல்டா சம்பந்தப்பட்ட நில உரிமை விவகாரத்தில் அமலாக்கத் தரப்பினர் முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அலட்சியம் அல்லது குற்ற அம்சங்கள் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தனது டுவீட்டர் பக்கத்தில் அவர் பதிவேற்றியுள்ளார்.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அலட்சியம் அல்லது குற்ற அம்சங்களை மேற்கொண்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால் நிச்சயமாக விசாரணை மேற்கொள்ளப்படும். பெல்டா மற்றும் அதன் குடியேற்றக்காரர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் நஜீப் கூறினார்.

இந்த நில விவகாரம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெல்டா அதன் தேவையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். எல்லா விதமான மேம்பாட்டு முயற்சியில் பெல்டா மற்றும் அதன் குடியேற்றக்காரர்களின் தேவைகளை நாம் பாதுகாப்போம் என அவர் சொன்னார்.

இதனிடையே, பெல்டாவின் தலைவர் டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சாமாட், தற்போது நில உரிமை மாற்றம் விவகாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஜாலான் செமாராக்கிலுள்ள 27 கோடி வெள்ளி மதிப்பிலான நிலத்தின் உரிமையை மீண்டும் பெறுவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கூறியிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன