திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > அந்நியத் தொழிலாளர்களுக்கான லெவி கட்டணத்தை முதலாளிகளே செலுத்த வேண்டும்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

அந்நியத் தொழிலாளர்களுக்கான லெவி கட்டணத்தை முதலாளிகளே செலுத்த வேண்டும்!

கோலாலம்பூர், டிச. 22-
2018ஆம் ஆண்டு முதல் அந்நியத் தொழிலாளர்களுக்கான லெவி கட்டணத்தை முதலாளிகளே செலுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வருகின்ற ஜனவரி முதல் தேதியிலிருந்து அந்நியத் தொழிலாளர்களுக்கான லெவி கட்டணத்தை செலுத்துவது முதலாளிகளின் பொறுப்பு என மனிதவள அமைச்சு தனது அறிக்கையின் வாயிலாக அறிவித்தது.

புதிய அந்நியத் தொழிலாளர்களுக்கும் தற்காலிக வேலை பெர்மிட் வைத்திருக்கும் அந்நியத் தொழிலாளர்களுக்கும் லெவி கட்டணம் செலுத்துவதை நாடு முழுமையும் உள்ள அனைத்து முதலாளிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு முதலாளிகள் கையெழுத்திடும், முதலாளிகளின் உத்தரவாதம் எனும் ஆவணத்தின் ஒரு பகுதியாக இந்த லெவி கட்டணம் செலுத்தும் நிபந்தனை இடம்பெற்றுள்ளது. இந்த விதிமுறையை பின்பற்றாத முதலாளிகளுக்கு எதிராக அந்நியத் தொழிலாளர் லெவி கட்டணம் தொடர்பான சட்டவிதிகள் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில் துறையை பொறுத்து தீபகற்ப மலேசியாவில் லெவி கட்டணம் 590 வெள்ளியிலிருந்து 1,850 வெள்ளி வரை உள்ளது. சபா சரவாக்கில் இந்த கட்டணம் 590 வெள்ளியிலிருந்து 1,010 வெள்ளி வரை உள்ளது. மலேசியாவில் 13 லட்சத்திற்கும் அதிகமான அந்நியத் தொழிலாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன