முகப்பு > கலை உலகம் > ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ரிலீஸ் தேதி..!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

‘விஸ்வரூபம் 2’ படத்தின் ரிலீஸ் தேதி..!

சென்னை- டிசம்பர்,22

உலக நாயகனின் நடிப்பில் , உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காண காத்திருக்கும் விஸ்வரூபம் 2′ படத்தின் ரிலீஸ் தேதி இனில் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். இந்த தகவலை  கமல்ஹாசனின் நெருங்கிய வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் இருந்து கொண்டு ‘விஸ்வரூபம் 2′ படத்தின் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் விஸ்வரூபம் 2’ படத்தின் கிராபிக்ஸ் மற்றும் சவுண்ட் பணிகளை திட்டமிட்டபடி முடிக்க தினமும் 15 நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற முடிவுடன் தான் கமல் இருந்தாராம்.

ஆனால் தற்போது அவர் தினமும் 20 மணி நேரம் வேலை செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது. வெறும் 4 மணி நேரம் மட்டுமே தினமும் தூங்கினாலும், படம் திருப்தியாக வந்துள்ளது என்பது அவரது முகத்தில் தெரியும் உற்சாகம் காட்டிக்கொடுப்பதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின் திருப்திக்காக கமல் எத்தகைய கடினமான பணிகளை செய்பவர் என்பதும் சினிமா உலகம் அறிந்த ஒன்று. ரசிகர்களின்  பாராட்டுக்களை தவிர வேறு எதுவும் ஒரு படைப்பாளனுக்கு முக்கியம் இல்லை என்பதை கமல் பல இடங்களில் கூறியுள்ளார்.  எனவே அதற்காக உழைக்கும் அவரின் இந்த படத்தை பார்க்கும் ஆவல் நாளுக்கு நாள் கூடுகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன