முகப்பு > மற்றவை > பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய பயண கடப்பிதழ்! டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய பயண கடப்பிதழ்! டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி

கோலாலம்பூர், டிச.22-
வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு கூடிய விரைவில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட பயணக் கடப்பிதழ் வெளியிடப்படவிருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி தெரிவித்தார்.

இந்த புதிய பயணக் கடப்பிதழை இன்னும் ஒன்றரை மாதங்களில், வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்பவர்கள் பெறுவார்கள் என அவர் கூறினார். 81,000 மலேசியர்களின் கைவசம் இருக்கும் (பழைய) கடப்பிதழ்களில் உள்ள பக்கங்கள் முழுமையாக முடிவடையவுள்ளது.

50 லட்சம் கடப்பிதழ்களைத் தயாரிக்க குடிநுழைவுத் துறையினால் முடியும். 90,000-க்கும் குறைவான கடப்பிதழ்களே முழுமையாக உபயோகிக்கத் தக்க நிலையில் உள்ளன. அதே சமயம், குடிநுழைவுத் துறை, புதிய கடப்பிதழ்களை அறிமுகப்படுத்தும் என ஸாஹிட் குறிப்பிட்டார்.

வெளியிடப்படவிருக்கும் புதிய கடப்பிதழ்களில், முகத்தை அடையாளம் காணும் அம்சம் இடம் பெறவிருக்கிறது. அனைத்துலக பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் கோட்பாடுகளுக்கு ஏற்றாற் போல் இந்தக் கடப்பிதழ்கள் வடிவமைக்கப்படும். புதிய அம்சங்களைக் கொண்ட கடப்பிதழ் வெளியிடப்படுவதன் வாயிலாக, போலியான கடப்பிதழ் கொண்டு நாட்டினுள் நுழைவோரின் எண்ணிக்கையை குறைக்கலாம் என ஸாஹிட் ஹாமீடி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன