வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > உள்ளூர் நடிகை நித்தியா மனோகரன் டெங்கி காய்ச்சலால் மரணம்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

உள்ளூர் நடிகை நித்தியா மனோகரன் டெங்கி காய்ச்சலால் மரணம்!

கோலாலம்பூர், டிச. 23 –
உள்ளூர் நடிகையான நித்தியா மனோகரன் டெங்கி காய்ச்சல் காரணமாக நேற்று மரணமடைந்தார். அவரது மரணத்தால் மலேசிய கலை உலகைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். மறைந்த நடிகை நித்தியா பல மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சிப் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிப்பின் மீதான ஆர்வத்தால் பல உள்ளூர் மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சி படங்களிலும் சிறப்பாக நடித்து வளர்ந்து வரும் இளம் கலைஞர் என புகழ்பெற்றவர் நித்தியா மனோகரன். அண்மையில் ஒளிப்பரப்பான தாமரை தொலைக்காட்சி படத்தில் அவர் நடித்த பாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது.  இயக்குனர் சூரியா ரவிகுமார் இயக்கத்தில் உருவான என்ன செய்ய போகிறாய் என்ற மேடை நாடகத்திலும் நித்தியா மனோகரன் சிறப்பாக நடித்திருந்தார்.

டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நித்தியா அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு நித்தியா சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்ததாக மலேசிய கலையுலகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

அவரது நல்லுடல் இன்று பிற்பகல் 1.௦௦ மணி அளவில் கிள்ளான், தெலுக் பூலாய்யில் உள்ள அவரின் வீட்டில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு சிம்பாங் லீமா இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன