பத்துகேவ்ஸ், ஜூலை 23-
பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மிக விமர்சையாக நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
மலேசியா பல்லின கலாசாரம் கொண்ட நாடு. இங்கு அனைவரது பெருநாட்களையும் தேசிய விழாவாக அரசு கொண்டாடுகின்றது. அந்த வகையில் நோன்புப் பெருநாளும் கோலாகலமாகக் கொண்டாட்டப்பட்டு வருகின்றது என ரவிச்சந்திரன் கூறினார்.
பத்துகேவ்ஸ் தொகுதியை பொறுத்தவரையில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை வலுவாக உள்ளது. சகோதரத்துவம் நாளுக்கு நாள் மேம்பாடு கண்கின்றது. அதை இந்த திறந்த இல்ல உபசரிப்பிலும் காண முடிவதாக ரவிச்சந்திரன் கூறினார். இந்த திறந்த இல்ல உபசரிப்பில் சிறார்களுக்கு பணமுடிப்பும் வழங்கப்பட்டது. இந்த திறந்த உபசரிப்பில் கலந்து கொண்ட அனைத்து பிரமுகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
