வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பவானிக்கு பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு உதவி
சமூகம்முதன்மைச் செய்திகள்

பவானிக்கு பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு உதவி

கம்பார், ஜூலை 23-

விபத்தின் காரணமாக பின் மண்டையில் ரத்தம் கட்டிக்கொண்ட நிலையில் முழு உடல் செயல் இழந்து தவிக்கும் பேரா கம்பாரைச் சேர்ந்த பவானிக்கு(வயது4) பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு சிறப்பு சக்கரநாற்காலியை வழங்கியது.

இது குறித்து பேசிய கம்பார் தொகுதி ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் நாகராஜன், இந்த உதவி குறித்து பேரா மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் நேருஜி, முனியாண்டியிடம் முன்வைத்ததாகவும், பின்னர் அவர் ம.இ.கா.வின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் உதவியுடன், இந்த சக்கரநாற்காலி பெற்றுத் தந்தார் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய நேருஜி, சாதரண சக்கரநாற்காலியை காட்டிலும், முழு உடம்பு செயல் இழந்தவர்களுக்கு உதவும் வகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இந்த சக்கரநாற்காலி பவானி நடமாட உதவி செய்யும் எனவும், குடும்ப உறுப்பினர்களுக்கு மிக உதவியாகஇருக்கும் என குறிப்பிட்டார்.  பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு, இதோடு நில்லாமல் பவானி எதிர்நோக்கும் பிறப்புப் பத்திர பிரச்னைக்கும் அவன செய்யும் என தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன