10 மாத பெண் குழந்தை சித்ரவதை: பெற்றோர் கைது

0
7

காஜாங், டிச.24 –

10 மாதக் கைக்குழந்தை அணியும் அணையாடையில் ரத்தக் கறை இருந்ததால் அக்குழந்தை சித்ரவதை செய்யப்பட்டிருக்கலாம் நம்பப்படுகிறது. அக்குழந்தையின் பெற்றோர் கைது நேற்று செய்யப்பட்டனர்.
குழந்தையின் வயிற்றுப் பகுதியிலும் முதுகிலும் சிராய்ப்புக் காயங்கள் இருந்ததை மருத்துவர் கண்டுபிடித்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் ஜபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.

குழந்தையின் பிறப்புறுப்பு அருகே இரத்தக் கசிவும் இருந்தது. சித்ரவதையால் இந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

பெற்றோர் இருவரும் திருமணம் செய்து கொள்ளமல் ஒன்றாக வாழ்கின்றனர். அந்தக் குழந்தை ஏற்கனவே உறவினரின் பராமரிப்பில் இருந்து வந்ததாகவும் கடந்த மாதம்தான் பெற்றோர் குழந்தையை தூக்கிச் சென்றனர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெற்றோரின் 3 மற்றும் 5 வயதுடைய மேலும் இரு குழந்தைகள் பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன ஜபிர் முகமட் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே போதைப்பொருள் துஷ்பிரயோகம் உட்பட பல குற்றப் பதிவுகள் உள்ளன என அவர் தெரிவித்தார்.