கோலசிலாங்கூர், ஜூலை 23-

மலேசிய இந்து சங்கம் கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 17ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம் வேலு

இவ்விழா வருகின்ற 29.07.2017 சனிக்கிழமை காலை மணி 7.45 தொடங்கி மாலை மணி 4.30 வரையில் புக்கிட் பிளிம்பிங்கிலுள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திலும் ரிவர்சைட் தமிழ்ப்பள்ளியிலும் நடைபெறவிருப்பதாக அதன் தலைவர் பன்னீர்செல்வம் வேலு தெரிவித்தார்.

இந்திய மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இந்து சமயம் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் 6 வயது பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரையில் அனைத்து தரப்பினருக்கும் போட்டியில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தேவாரம் பாடுதல், சமய பேச்சு போட்டி, சித்திரம் வரைதல், கோலம் போட்டி முதலானவை இதில் இடம்பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்போட்டியில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதேப்போல் இந்த ஆண்டும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநில பேரவையின் தலைவர் தொண்டர்மணி முனியாண்டி முத்தன், பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஜி சுலைமான் ரசாக், ம.இ.கா. தஞ்சோங் காராங் தொகுதி தலைவர் டத்தோ என்.எஸ்.கிருஷ்ணன் முதலானோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இவ்விழாவில் சமய ஆர்வலர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துக்கொண்டு ஆதரவளிக்க வேண்டுமென பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

மேல்விவரங்களுக்கு 019-6436640 (பன்னீர்செல்வம்) என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.