சிலாங்கூர் அரசால் வீட்டிற்கான வங்கி கடனுதவி கிடைத்தது!

0
1

செலாயாங், டிச. 27-

புக்கிட் பொத்தாக் ஆரம்பகால  குடியிருப்பாளர்கள் தங்களின் வீடுகளை வாங்குவதற்கு வங்கிக் கடனுதவி மாநில அரசாங்கத்தின் உதவியுடன் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி வெள்ளம் அடைந்தனர்.

தாமான் முத்தியாரா செலாயாங் வீடமைப்பு திட்டத்தில் செக்சன் 14 மேபேங்க் மூலம் கடனுதவி பெற்று வீட்டுமனை உரிமையாளர்கள் ஆகியவை பல்லாண்டுகளாக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது என்று சுகன் கோவிந்தசாமி, (வயது 27) கூறினார். தனது சிறுவயதில் இருந்தே புக்கிட் பொத்தாக்கில் குடியிருந்த வேளையில், தகப்பனார் வங்கிக் கடனுதவி பெறுவதில் தோல்வி அடைந்தார். ஆனால், இன்று மாநில அரசாங்கத்தின் உதவியுடன் சொந்தமான வீட்டை பெற்றுள்ளது மகிழ்ச்சி அடைகிறேன் என்று விவரித்தார்.

“நான் சிறுவனாக இருக்கும் போது எங்களின் வீடுகளை மேம்பாட்டு திட்டங்களுக்காக உடைத்தனர். எனது தந்தையார் வீடமைப்பு கடனுதவி பெறுவதில் தோல்வி அடைந்தார். ஆனால் தற்போதைய பரிவு மிக்க அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, எனது பெயரை கொண்டு மீண்டும் விண்ணப்பம் செய்த போது படித்துக் கொண்டிருந்த காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் மாநில அரசாங்கம் மூலம் கனவு நினைவாகியது,” என்று தாமான் முத்தியாரா செலாயாங் வீடமைப்பு திட்டத்தின் சாவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் சுகன் பேசினார்.

 சிலாங்கூர் மாநில அரசாங்கம் ரிம 99,000 மதிப்பிலான வீட்டை பெறுவதற்கு முழுமையான உதவியை செய்துள்ளது என்று விவரித்தார். இந்த வேளையில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் மாநில அரசாங்கத்திற்கு தனது குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்தார்.
(நன்றி, சிலாங்கூர் கினி)