செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பெருமாள் பிச்சைக்கு சவால் ராவணப் பிச்சை..!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பெருமாள் பிச்சைக்கு சவால் ராவணப் பிச்சை..!

தமிழ் சினிமாவில் ‘பெருமாள் பிச்சை’ கேரக்டரை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. ‘சாமி’ படத்திற்கு விக்ரம் பெரும் பலம் என்றால், மீதி பலம் அந்த பெருமாள் பிச்சை என்ற தெலுங்கு வில்லன் கோட்டா சீனிவாச ராவ் தான்.

சாமி படத்தில், தனது உடல் மொழியாலும் நடிப்பாலும், கவனத்தை ஈர்த்த இந்த வில்லனை க்ளைமாக்சில் சாமி உயிரரோடு எரித்து விடுகிறார். இந்த நிலையில் ‘சாமி 2’ படத்தை எடுத்துக்கொண்டிருக்கும் ஹரிக்கு பலமாக இந்த படத்தின் வில்லன் கேரக்டரை ஏற்று நடிக்கிறார் பாபி சிம்ஹா.

இதில், அவர் பெருமாள் பிச்சையின் மகன் ராவணப் பிச்சையாக வருகிறார். முதல் பாகத்தில் வெற்றியைக் கொடுத்த அதே வில்லத் தனத்தை, பாபி இரண்டு மடங்காக இதில் கொடுப்பார் என்று ஹரியும் விக்ரமும் நம்புகின்றனர். பாபி சிம்ஹாவின் வில்லன் முகத்தை தமிழ் சினிமா இதற்கு முன்பு பார்த்திருந்தாலும் இந்த படத்தில் வேறு கோணத்தில் அது இருப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர். ராவணப் பிச்சைக்கு இது தீனிதாங்கோ..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன