புத்ராஜெயா, டிச.28-
14ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும் தேதி என சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டுவரும் தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹஷிம் அப்துல்லா கூறுகையில், பிரதமரின் பரிந்துரையின் படி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மாட்சிமைத் தங்கிய மாமன்னரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

இந்நிலையில், நாடாளுமன்றம் அடுத்தாண்டு ஜனவரி 11இல் கலைக்கப்பட்டு, வேட்பாளர் நியமனம் மார்ச் 11ஆம் தேதி நடைபெற்று வாக்களிக்கும் நாள் மார்ச் 11ஆம் தேதி நடைபெறும் என பரவும் தகவலில் உண்மையில்லை. அது ஏற்புடையுதாகவும் இல்லை.

இதற்கு முக்கியக் காரணம் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம், (55)4ஆவது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஓர் அறிக்கையில் முகமட் ஹஷிம் அப்துல்லா குறிப்பிட்டார்.