வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > சாலை விபத்தில் கிருஷ்ணன், யுகேந்திரன் பலி! வீடு திரும்பும் போது ஏற்பட்ட துயரம்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சாலை விபத்தில் கிருஷ்ணன், யுகேந்திரன் பலி! வீடு திரும்பும் போது ஏற்பட்ட துயரம்

தெலுக் இந்தான், டிச. 28-
உணவகம் ஒன்றில் தொம் யாம் உணவை வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது எதிரே வேகமாக வந்த வாகனம் மோதியதில் -கிருஷ்ணன் த/பெ சுப்பையா (வயது 64), அவரது பேரன் யுகேந்திரன் த/பெ சரவணன் (வயது 11) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மாண்டனர்.

நெஞ்சை உலுக்கும் இந்த துயர சம்பவம் நேற்று இரவு மணி 8.20 அளவில் இங்குள்ள ஜாலான் கம்போங் பஹாகியா கம்போங் காஜாவில் நிகழ்ந்ததாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் சுப்ரிண்டன் யாஹ்யா ஹாசான் தெரிவித்தார்.

ஆதரவற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வேலை செய்துவரும் அந்த முதியவர் தனது பேரனுடன் சம்பவத்தின் போது அந்த உணவகத்திலிருந்து வெளியேறி சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது சாலையில் அதிகமான வாகனங்கள் இருந்த நிலையில் படுவேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் அவர்களை மோதி தள்ளியது.

பலத்த காயங்களுக்கு இலக்கான அவ்விருவரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் கூறினார். அவ்விருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவ்விருவரையும் மோதிய நான்கு சக்கர வாகனத்தின் ஓட்டுநரை விசாரணைக்காக போலீஸ் 3 நாட்களுக்கு தடுத்து வைத்திருப்பதாக என செய்தியாளரிடம் சுப்ரிண்டன் யாஹ்யா ஹாசான் கூறினார்.

ஐந்தாம் வகுப்பு மாணவனான யுகேந்திரன் பள்ளி விடுமுறையின் காரணமாக தனது தாத்தாவைப் பார்க்க வந்துள்ளார். தனது தாத்தாவுடன் ஆசையுடன் வெளியே சென்ற யுகேந்திரன் அவருடனே சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது அவர்களது குடும்பத்தினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன