விஜயை பெரிய நடிகராக்கியது நான் தான்..!

0
1

‘விஜய் போன்ற நடிகர்கள் இன்று பெரிய நடிகராக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவர் நடித்த படமும் சின்ன பட்ஜெட் படம் தான். அந்த சின்ன பட்ஜெட் படத்தை நாங்கள் திரையரங்குகளில் ஓட்டி, வெற்றிப்படமாக்கியதால்தான் இன்று அவர் ஒரு பெரிய நடிகராக உள்ளார். விஜய் மட்டுமல்ல அனைத்து பெரிய நடிகர்களுக்கும் இது பொருந்தும். திரையரங்கு உரிமையாளர்கள் புறக்கணித்திருந்தால் விஜய் இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியாது என்று திரையரங்குகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் இப்படி கூறியிருக்கிறார்.

‘ஆறாம் திணண’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.  இந்த படத்தில், மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்திலும், ரவி மரியா, கலக்க போகுது யாரு புகழ் குரேஷி உட்பட பலரும் நடித்துள்ளனர். இது ஒரு மர்ம பேர் படம்.

இந்த விழாவில் அபிராமி ராமநாதன், மேலும், திரையரங்குகள் பொன் முட்டையிடும் வாத்து. அதை தயாரிப்பாளர்கள் இழந்துவிட வேண்டாம். அமேசான் போன்ற இணையதளங்களுக்கு படத்தின் உரிமையை 10 அல்லது 15 நாட்களில் ஒருசில தயாரிப்பாளர்கள் கொடுத்து விடுகிறார்கள். இதனால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. திரையரங்குகளும் ஒருநாள் காணாமல் காலியாகிவிடும் சூழ்நிலையை உண்டாக்க வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

”நான் தயாரிப்பாளர்களிடம் வைக்கும் ஒரு வேண்டுகோள் என்னவெனில் தயவுசெய்து அமேசான் போன்ற இணையதளங்களுக்கு ஒருவருடம் கழித்து உரிமையை கொடுங்கள்’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here