ஸ்டோக் சிட்டி, ஜூலை.24 –
இங்கிலீ்ஷ் பிரிமீயர் லீக் கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான செல்சியிடம் இருந்து தற்காப்பு ஆட்டக்காரர் கர்ட் ஸோமாவை தற்காலிக ஒப்பந்தத்தில் பெற்றுள்ளது ஸ்டோக் சிட்டி.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி 2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டி அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ள வேளையில் புதிய ஆட்டக்கார்ரகளை ஒப்பந்தம் செய்வதில் கிளப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் மார்க் ஹியூசை நிர்வாகியாக கொண்டுள்ள ஸ்டோக் சிட்டி, கர்ட் ஸோமாவை தற்காலிக ஒப்பந்தத்தில் பெற்றிருக்கிறது.
செல்சி அணிக்காக 71 ஆட்டங்களில் விளையாடிவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கர்ட் ஸோமா. ‘‘கர்ட் ஸோமா மிகச்சிறந்த இளம் தற்காப்பு ஆட்டக்காரர் வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் வருகையால் வரும் தொடரில் எங்கள் அணி மேலும் வலுப்பெறும்’’ என்று ஸ்டோக் சிட்டி நிர்வாகி கூறியுள்ளார்.
22 வயதாகும் கர்ட் ஸோமா பிரான்ஸ் தேசிய அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 முதல் 2014 வரை செயின்ட் எடியென்னே அணிக்காவும், 2014 முதல் தற்போது வரை செல்சியாக அணிக்காகவும் விளையாடியுள்ளார். 2014 முதல் 2017 வரையிலான காலத்தின்போது செயின்ட் எடியென்னே அணிக்காக தற்காலிக ஒப்பந்தத்தில் 12 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
