ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தவறுகளுக்கு மன்னித்து விடுங்கள்: துன் மகாதீர்
முதன்மைச் செய்திகள்

தவறுகளுக்கு மன்னித்து விடுங்கள்: துன் மகாதீர்

கோலாலம்பூர், டிச. 30-
பதவி வகித்த காலத்தில் செய்த தவறுகளுக்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மனிதர்கள் தவறுகள் செய்வது இயல்புதான். நானும் மனிதன்தானே என்று இன்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து கட்சியின் முதலாம் ஆண்டு பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான் தவறாகப் பேசியிருந்தாலோ அல்லது என்னை அறியாமலேயே யாருடைய மனத்தையாவது புண்படுத்தியிருந்தாலோ மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.

மற்றவர்களை போலவே நானும் சில தவறுகள் செய்திருக்கலாம். குறிப்பாக எனது அரசியல் வாழ்க்கையில் நடந்திருக்கலாம். அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என அவர் கூறினார்.

ஆனால், பதவியிலிருந்தபோது என்னென்ன தவறுகள் செய்தார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
முன்னாள் துணைப் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஓரிணப்புணர்ச்சி வழக்கில் சிறைக்கு அனுப்பியதற்கும் மன்னிப்புக் கேட்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியபோது, அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என பதிலளித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன