ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > கோத்தின்ஹோ குறித்த விளம்பரத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நைக்கி!
விளையாட்டு

கோத்தின்ஹோ குறித்த விளம்பரத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நைக்கி!

பாரிஸ், ஜன.1 –

லிவர்புல் ஆட்டக்காரர் பிலிப்பே கோத்தின்ஹோவின் பெயர் பொறிக்கப்பட்ட ஜேர்சி படத்தை வெளியிட்ட நைக்கி நிறுவனம் சில நிமிடங்களில் அதனை மீட்டு கொண்டது. இதனால் பிலிப்பே கோத்தின்ஹோ, பார்சிலோனாவில் இணையப் போவதாக வெளிவந்திருக்கும் ஆருடங்கள் வலுக்கின்றன.

கோத்தின்ஹோ பெயர் பொறிக்கப்பட்ட பார்சிலோனா ஜேர்சியுடன் விளம்பரம் ஒன்றை, நைக்கி நிறுவனம் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டது. அதிசயம் நிகழும்போது என்ற தலைப்பில் நைக்கி விளம்பரத்தை வெளியிட்டது.எனினும், சில நிமிடங்களுக்குப் பின்னர் அந்த விளம்பரம் மீட்டு கொள்ளப்பட்டது.

கோத்தின்ஹோவின் ஆதரவு நிறுவனங்களில் ஒன்றாக நைக்கி நிறுவனம் விளங்குகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், கோத்தின்ஹோவைப் பெறுவதற்காக பார்சிலோனா முன் வைத்த அழைப்பு தொகையை லிவர்புல் நிராகரித்தது.

அதேவேளையில் பார்சிலோனாவில் இணைய தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் தம்மை ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்குமாறு கோத்தின்ஹோ லிவர்புல் நிர்வாகத்திடம் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன