”உங்களுக்கு ஓட்டுப் போடமாட்டேன்” பிரபல இயக்குனர்!

0
3

சென்னை, ஜன.2 – 

வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்விக்கு 20 ஆண்டுகள் கழித்து  ”ஆன்மீக அரசியலோடு வருகிறேன்” என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினியின் இந்த அறிவிப்பால், அவரது ரசிகர்கள் மகிழ்ந்தாலும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தொடர்ந்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.  இதில் திரையுலகமும் அடங்கியுள்ளது.

 ‘சுந்தர பாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன், ”என்னால் உங்களுக்கு வாக்களிக்க முடியாது” என்று தமது முகநூலில் வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

அன்புள்ள ரஜினிகாந்த சாருக்கு,  நான் உங்களின் தீவிர ரசிகன்.  அதனை நான் எனது முதல் படைப்பிலேயே பதிவு செய்தவன்.  ஆனால் ஒரு வாக்காளனாக, தமிழனாக, என்னால் உங்களுக்கு வாக்களிக்க முடியாது.

இனி ஒரு விதி செய்வோம் – அது யாதெனின் – இனியாவது நமது தமிழ் மண்ணை ஒரு தமிழனே ஆளட்டும்.

ஆனால், தமிழ் திரையுலகில் நீங்களே என்றும் எங்களின் சூப்பர் ஸ்டார் நன்றி – என்றும் அன்புடன் எஸ்.ஆர் பிரபாகரன், திரைப்பட இயக்குனர் என்று இப்படி காட்டமாகே தெரிவுத்துள்ளார்.