ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > தொங்கு பாலம் பழுது: தே.மு.விடம் மன்னிப்பு கேட்ட தம்பதியர்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

தொங்கு பாலம் பழுது: தே.மு.விடம் மன்னிப்பு கேட்ட தம்பதியர்!

கோலாலம்பூர், ஜன.2
பழுதான தொங்கு பாலத்தில் ஓர் ஆடவரும் ஒரு சிறுவனும் சிரமப்பட்டு நடக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது. சித்தி ஜாஹாரா என்பவர் முகநூலில் பதிவேற்றியிருக்கும் இக்காணொளியை சுமார் 3 மணி நேரத்தில் 826,000க்கும் அதிகமானோர் பார்வையிட்டிருப்பதோடு 24,000 முறை பகிரப்பட்டுள்ளது.

அதில் என் மகன் பள்ளிக்கு செல்வதில் ஆர்வமாக இருக்கின்றான். ஆனால், பள்ளிக்கு செல்வதற்கு இந்த அருமையான பாதையைக் கடக்க வேண்டியுள்ளது. கோலா லிப்பிஸ் புக்கிட் பெந்தோங்கிலுள்ள இந்த தொங்கு பாலம் கடந்த ஓர் ஆண்டுகளுக்கும் மேல் பழுதாகியிருக்கும் நிலையில் இதுவரையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, முகநூலில் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ள அவர், ஜெலாய் சட்டமன்ற உறுப்பினர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தன்னையும் தன் கணவரையும் வந்து சந்தித்ததாகவும் நடப்பு தொங்கு பாலத்தின் நிலை குறித்து விளக்கம் அளித்ததோடு வருகின்ற 8ஆம் தேதி புதிய பாலத்தைக் கட்டும் பணிகள் தொடங்கவிருப்பதாக விளக்கம் அளித்தார். அக்காணொளியைப் பதிவேற்றியதற்காக ஜெலாய் சட்டமன்ற உறுப்பினரிடம் தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் சித்தி ஜாஹாரா குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, முகநூலில் பிரண்ட்ஸ் ஆஃப் பி.டி.ஆர்.எம். பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு காணொளியில் வான் ரோஸ்டி அந்த தொங்கு பாலம் தொடர்பான காணொளி தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

வெள்ளம் காரணமாக அந்த பாலம் சேதமடைந்துள்ளது. அதேவேளையில், அப்பகுதியை கடந்து செல்வதற்கு மாற்று வழியும் உள்ளது. அதோடு, ஜே.கே.கே.கேவின் படகு வசதியையும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இவ்விவகாரத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. புதிய பாலத்திற்கான திட்டமிட்டுள்ளோம். ஆனால், வானிலை நிலையைப் பொறுத்து அது கட்டப்படும். சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரை சந்தித்து பாதுகாப்பு விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தாம் வலியுறுத்தியிருப்பதாக வான் ரோஸ்டி குறிப்பிட்டார்.

முகநூலில் இந்த காணொளியைப் பார்த்த பொதுமக்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்ததோடு சம்பந்தப்பட்ட தொங்கு பாலம் உயிரிழப்பை ஏற்படுத்துவதற்குள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன