பிரீமியர் லீக் – சுவான்சி சிட்டியை வீழ்த்தியது டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் !

0
6

லண்டன், ஜன.3 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 2 – 0 என்ற கோல்களில் சுவான்சி சிட்டியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தனது முன்னணி தாக்குதல் நட்சத்திரம் ஹாரி கேனை முதன்மை அணியில் களமிறக்காமல் வெற்றி பெற்றிருக்கிறது.

ஹாரி கேனுக்குப் பதில் களமிறங்கிய பெர்னான்டோ லோரேந்தே, 12 ஆவது நிமிடத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் முதல் கோலைப் போட்டார். அந்த கோலைப் போடும்போது லோரேந்தே ஒப்சைட் நிலையில் இருந்ததாக கூறப்பட்டாலும், நடுவர் அந்த கோலை அங்கீகரித்தார்.

கடும் மழையில் நடைபெற்ற ஆட்டத்தை டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் முழுமையாக ஆக்கிரமித்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 89 ஆவது நிமிடத்தில் டெலி அலி போட்ட கோல், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் வெற்றியை உறுதிச் செய்தது. இந்த வெற்றியின் மூலம் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தனது பரம வைரியான அர்செனலை முந்தி ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.