சென்னை, ஜூலை.24 – 

சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் முதல் பாடல் ஜூலை 25 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போடா போடி,  நானும் ரெளடிதான் படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர் அனிருத் இசையமைத்து வருகிறார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“நானா தானா வீணா போனா ” என்ற அந்த பாடல் நள்ளிரவு மணி 12 -க்கு வெளியாகும் என விக்னேஷ் சிவன் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முதல் முறையாக சூர்யா நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில் , ஆர்.ஜே பாலாஜியும் நடிக்கின்றனர்.