அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > கலைஞரிடன் ஆசி பெற்றேன்! ரஜினிகாந்த்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

கலைஞரிடன் ஆசி பெற்றேன்! ரஜினிகாந்த்

சென்னை, ஜன, 3-

திமுக தலைவரும் அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட கருணாநிதியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததோடு, தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதோடு மக்களின் ஆதரவை தெரிந்துக் கொள்ள புத்தாண்டன்று அரசியல் மாற்றம் விரும்புபவர்கள் பதிவு செய்வதற்காக இணையதளம் மற்றும் செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

தான் அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்த பிறகு, நேற்று ஊடகத்தினரை சந்தித்து ரஜினி பேசினார். அரசியல் அறிவிப்புக்குப் பிறகு ரஜினி படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததார். அவருடைய முதல் அரசியல் கட்சி தலைவரின் சந்திப்பு இதுவாக அமைந்தது.

சென்னை கோபாலபுரம் வந்த ரஜினிகாந்த் சுமார் 20 நிமிடங்கள் கருணாநிதியை சந்தித்தார். அவருடன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் உடன் இருந்தார் இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். அவருடைய உடல்நலனை கேட்டறிந்தேன், என்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் கூறி ஆசி பெற்றோன் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன