லண்டன், ஜன.4 –

லிவர்புல் கால்பந்து கிளப்பில் இருந்து பிலிப்பே கோத்தின்ஹோ வெளியேறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அவருக்குப் பதில், பிரான்சின் இளம் ஆட்டக்காரர் லெமாரை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரிட்டனின் தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

மொனாக்கோ கிளப்பில் விளையாடும் லெமாரை வாங்குவதற்காக 9 கோடி ஈரோ டால்ரை வழங்க லிவர்புல் முன் வந்திருப்பதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. 22 வயதுடைய லெமாரை வாங்க மென்செஸ்டர் யுனைடெட், செல்சி, அர்செனலும் ஆர்வம் கொண்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் லெமாரை வாங்கும் முயற்சியில் அர்செனல் கிட்டத் தட்ட வெற்றி பெறும் நிலையில் இருந்தது.எனினும் கடைசி நிமிடங்களில் அந்த ஆட்டக்காரர் மொனாக்கோ கிளப்பில் தொடர்ந்து நீடிக்க முடிவு செய்திருந்தார்.

கோத்தின்ஹோவை விட்டு கொடுக்க லிவர்புலுக்கு மனமில்லை என்றாலும் , அந்த ஆட்டக்காரர் பார்சிலோனாவில் இணைவதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். ஜனவரி மாத இறுதிக்குள் கோத்தின்ஹோ, பார்சிலோனாவில் இணையக்கூடும் என கூறப்படுகிறது.