முகப்பு > கலை உலகம் > நட்சத்திர விழாவில் தளபதி?
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

நட்சத்திர விழாவில் தளபதி?

கோலாலம்பூர், ஜூன் 5-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்கும் நட்சத்திர விழா பிரமாண்ட கலைநிகழ்ச்சியில் தளபதி விஜய் கலந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு அதன் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ரஜினி – கமலுக்குப் பிறகு அனைத்துலக நிலையில் அதிகமான ரசிகர்களை கொண்டிருப்பது விஜயும் அஜித்தும்தான். தல அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் தளபதி விஜய், தமது ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நாளை கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில் நடக்கும் நட்சத்திர விழாவில் விஜய் கலந்து கொள்வதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகப் பரவுகின்றது.

இதனிடயே அவர் சென்னை அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படும் நிழல்படம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றது. இதை வரவேற்று அவரது மலேசிய ரசிகர்கள் ஆரவாரத்தில் இருக்கின்றார்கள். குறிப்பாக இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை பெறுவதில் அவர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

ஆனால் இதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மறுத்துள்ளார்கள். இருப்பினும் இந்த நட்சத்திர விழாவில் விஜயை திடீரென களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிக்கின்றன. நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன