போர்ட்டிக்சன் ஜூலை 24-

உயர்கல்வி உபகாரச் சம்பளத்திட்டத்தில் தகுதியான இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வண்ணம் தேசிய மஇகா இளைஞர் பகுதியின் கல்விப்பிரிவு, நெகிரி மாநில மஇகா இளைஞர் பகுதி, தெலுக்கெமாங் தொகுதி ம.இ.கா இளைஞர் பகுதி, ஆகியவை இணைந்து பாலிடெக்னிக் போர்ட்டிக்சனில் வருகின்ற 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கருத்தரங்கில் இந்திய மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தேசிய மஇகா இளைஞர் பகுதி துணைத்தலைவர் தினாளன் டி.ராஜகோபால் அழைப்பு விடுத்துள்ளார்.  எஸ்.பி.எம், எஸ்.பி.டி.எம், மெட்ரிக்குலேசன் பயின்ற மாணவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அவர்களுடைய கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட தகவல்களை எடுத்து வர வேண்டும். 28 மில்லியன் உபகாரச்சம்பளம், 1800 இடங்கள், 13 கல்லூரிகள் என இந்தத் திட்டம் மிகச்சிறப்பு வாய்ந்தது.

வாய்ப்புகள் இல்லை எனும் நிலையைத் தாண்டி, வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள நம்மவர்கள் முன் வர வேண்டும். இது நல்லதொரு வாய்ப்பு என்பதனை சமுதாயத்தினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.  அதே நேரத்தில் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தகுதி பெறுபவர்களுக்கு அன்றைய தினமே உபகாரச் சம்பளத்திற்கான உறுதிக்கடிதம் வழங்கப்படும் என தினாளன் டி.ராஜகோபால் தெரிவித்தார்.மேலும் தொடர்புக்கு சுராச் 013 – 3449908, முகுந்தன் 014-6419650, திரிபுரபவன் 012-5789585.