அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஜூனில் அன்வார் விடுதலை!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஜூனில் அன்வார் விடுதலை!

கோலாலம்பூர், ஜன.6-

நன்னடத்தைக் காரணமாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகின்ற ஜூன் மாதம் சிறையிலிருந்து விடுதலையாகவிருக்கிறார்.

சிறையில் அவரது நன்னடத்தைக் காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை குறைக்கப்பட்டு அவர் விடுதலையாகவிருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓரினப்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அன்வாரின் தண்டனைக்காலம் 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் முடிகின்றது. ஆயினும், சிறையில் அவர் நல்ல முறையில் நடந்துக்கொண்டதைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்படவிருப்பதாக உள்துறை அமைச்சு கூறியது.

ஆயினும், அன்வார் ஜூன் மாதத்தில் எந்த தேதியில் விடுவிக்கப்படுவார் என்பதை அவ்வமைச்சு குறிப்பிடவில்லை. இதனிடையே, அன்வாரின் மனைவியும் பி.கே.ஆரின் தலைவருமான டத்தோஸ்ரீ வான் அசிஸா கூறுகையில், எந்தவொரு பிரச்னையும் இல்லையென்றால் அன்வார் ஜூன் மாதத்தில் விடுதலையாவார் என தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன