அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பினாங்கில் 1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பினாங்கில் 1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்!

ஜோர்ஜ்டவுன், ஜன.7-
தாய்லாந்திலிருந்து கள்ளத்தனமாக கொண்டு வரப்பட்டு இங்குள்ள சிம்பாங் அம்பாட்டிலுள்ள ஒரு கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்ட 1 லட்சம் மதிப்புடைய பட்டாசுகளைப் போலீஸ் பறிமுதல் செய்தது.

கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதணையின் கீழ் 400 பெட்டிகளிலான அந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பினாங்கு மாநில குற்றப்புலனாய்வுத் துறையின் மூத்த துணை கமிஷனர் ஜைனோல் சாமா தெரிவித்தார்.

அண்மையில், நெடுஞ்சாலையில் போடப்பட்ட போலீஸ் சோதணையில் பட்டாசுகளை ஏற்றி வந்த லோரியைப் போலீஸ் மடக்கி பிடித்ததோடு அதன் ஓட்டுநரிடம் போலீஸ் விசாரணையை மேற்கொண்டது. அதன் பின்னர், அந்த ஓட்டுநர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த கிடங்கைப் போலீஸ் சோதணையிட்டதாக அவர் கூறினார்.

சீன பெருநாளுக்கு சந்தையில் விற்பதற்காக பல்வேறு வகையான பட்டாசுகள் இந்த கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது. கெடா, புக்கிட் காயூ ஈத்தாமின் எல்லைப் பகுதியிலிருந்து திருட்டுத்தனமாக லோரியின் வழி கொண்டு வரப்பட்ட இந்த பட்டாசுகள் எந்தெந்த பகுதிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்ததையும் போலீஸ் கண்டு பிடித்துள்ளது.

இந்த பட்டாசுகள் அனைத்தும் செபெராங் பெராய் செலாத்தான், தைப்பிங் ஆகிய பகுதிகளில் விற்கப்படவிருந்தது. கைது செய்யப்பட்ட 29 வயதுடைய லோரி ஓட்டுநர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கிடங்கில் வாடகைக்கு இருந்தவரும் இந்த பட்டாசு கொள்முதல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவருமான ஓர் ஆடவரைப் போலீஸ் தேடி வருவதோடு 1957ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டவிதியின் செக்க்ஷன் 8இன் கீழ் போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருவதாக ஜைனோல் சாமா குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன