வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > லங்காவியில் போட்டியிட முடியுமா ? ஹிஷாமுடினுக்கு மஹாதீர் சவால்
முதன்மைச் செய்திகள்

லங்காவியில் போட்டியிட முடியுமா ? ஹிஷாமுடினுக்கு மஹாதீர் சவால்

கோலாலம்பூர், ஜூலை.24 – 

பகாங்கில் உள்ள பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை எதிர்த்து போட்டியிடுமாறு தமக்கு சவால் விடுத்த அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் உசேனுக்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஹிஷாமுடினுக்கு துணிவிருந்தால் தம்மை எதிர்த்து லங்காவி தீவில் போட்டியிட வருமாறு மஹாதீர் அழைப்பு விடுத்துள்ளார். நஜிப்பின் கோட்டையாக விளங்கும் பெக்கான் நாடாளுமன்றம் ஒரு விசித்திரமான தொகுதி என்றும் மஹாதீர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தேர்தலிலும் அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுவதாக மஹாதீர்  தெரிவித்தார். ஒரு கட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரமாக இருக்கும் வேளையில் திடீரென்று அடுத்த தேர்தலில் அதன் எண்ணிக்கை 80 ஆயிரமாக கூட உயர்ந்துள்ளது என மஹாதீர் தெரிவித்தார்.

எனினும் மஹாதீர் குறிப்பிட்டு எந்த ஒரு பொதுத் தேர்தலையும் சுட்டி காட்டவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இதனிடையே மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2 என்ற விவாத மேடையில் தாம் பிரதமருடன் மட்டுமே விவாதம் நடத்த விரும்புவதாக மஹாதீர் தீர்க்கமாக அறிவித்துள்ளார். அந்த விவாத மேடையில் நஜிப்புக்குப் பதில்  அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் சர்காஷி கலந்து கொள்வதை தாம் ஏற்கப் போவதில்லை என மஹாதீர் கூறினார்.

92 வயதாகி விட்ட தம்மை சந்திக்க 64 வயதுயை நஜிப் தயக்கம் காட்டத் தேவையில்லை என மஹாதீர் தெரிவித்தார். இந்த விவாத மேடையின் வழி ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் தொடர்பில் மக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பங்களை தீர்க்க முடியும் என அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன