திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > கவுதம் மேனன் படத்தில் காயத்ரி
கலை உலகம்

கவுதம் மேனன் படத்தில் காயத்ரி

பெங்ளூரை சேர்ந்த தமிழ் பெண் காயத்ரி. ‘ஏன் இப்படி மயக்கினாய்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்  விஜய் சேதுபதியுடன் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து அவர் நடித்துள்ள `புரியாத புதிர்’ திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில், காயத்ரி `உலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் கவுதம்மேனன் தயாரிக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தில் நடிக்க காயத்ரி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். விஷ்ணு விஷால் – தமன்னா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் அவர்களுடன் காயத்ரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் மேனின் உதவி இயக்குநர் செந்தில் வீராசாமி இயக்க உள்ள இப்படத்தை, கவுதம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒண்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மூலம் தயாரிக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன