கவிஞருக்கு கட்டம் சரியில்லை..!

0
3

கவிஞரும் சினிமா பாடலாசிரியருமான வைரமுத்துக்கு, சனிபெயர்ச்சி தொடங்கியதில் இருந்து கட்டம் சரியில்லை போலிருக்கு..!

திருப்பாவை அருளிய ஆண்டாள் பற்றி, தரக்குறைவாக விமர்சித்துள்ளாத அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அதோடு,  வைரமுத்து, மன்னிப்பு என்று நேரடியாக கூறாமல் வருந்துகிறேன் என்று கூறியுள்ளதும் மேலும் ஒரு சர்ச்சையை எழுப்பி உள்ளது.

வைரமுத்துவின் இந்த கருத்திற்கு நடிகர் எஸ்வி சேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், “மூளையிலும், நாக்கிலும் சனி அமர்ந்துள்ள வைரமுத்து, கனிமொழி மூலமாக ஆண்டாள் அருளால் இனி, திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் வீரமணி நாவின் மீது அமர்ந்திருக்கும் சனி மூலமாக உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இந்துக்கள் கடவுளாக வணங்கும் தெய்வத்தை தரக்குறைவாக பேசிவிட்டு, புண்படும்படியாக பேசியிருந்தால் வருந்துகிறேன் என்று சொல்வது என்ன நியாயம். ஒருவரின் தனிப்பட்ட கருத்து என்னவாக வேண்டுமானால் இருக்கலாம். அதை பொதுமேடையிலா பேசுவது?, மதம் சார்ந்த ஒரு விஷயத்தை பேசும்போது யோசிக்க வேண்டாமா. அதுவும் மேல்நாட்டுக்காரர் கூறியதை இந்த இடத்தில் மேற்கோள் காட்ட என்ன அவசியம் வந்தது என  இப்படியாக வைரமுத்து மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அது மட்டும் இல்லாமல்,  அவர் மத உணர்வுகளோடு விளையாடி இருக்கிறார் என்று இந்த விவகாரம் தொடர்பாக, பலரும் புகார் அளித்து உள்ளனர்.

பொதுமக்கள் மத்தியிலும் வைரமுத்துவின் பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் அவர்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.  அவற்றில் சில இங்கு :

  1. உன் தாய் உன்னை சுமந்த மாதமோ பத்து, உன் பெற்றோர்கள் உனக்கு வைத்த பெயரோ வைரமுத்து. ஆனால் உனக்கு பிடித்து விட்டதோ பித்து. ஆண்டவனையே ஆண்டவள் ஆண்டாள். உனக்கு தெரியுமோ, நீ ஒரு முட்டாள். அவள் பார்த்தது ஒரு கல் அல்ல, கல்லிலிலே. அவள் தன் கண்ணனை கண்டால். நீ கண்ணனையும் பார்க்கவில்லை, ஆண்டாளின் அன்பையும், காதலையும் பார்க்கவில்லை. உன் நாக்கில் இருந்த கலைவாணியை ஓட வைத்து விட்டாய். சனி என்பது எங்கும் இல்லை, உன் நாக்கில் வந்து விட்டது. நீ உன் வார்த்தையால் சுட்டது ஆண்டாளை அல்ல, நீ உனது அஹம்காரத்தின் அக்னிக்கு நீயே எண்ணெய் ஊற்றி விட்டாய். நீ பேசியது அறிவு என்று நினைத்து விட்டாய். அப்பேச்சு உனது வாழ்வின் கீழ்நிலைக்கு செல்லும் முதல் படி.
  2. கண்ணன், என்னைக்கும் அதே நிலை தான். இன்று காலையில் ஆண்டாள் படத்தை பூஜை அரையில் பார்த்தவுடன் அடக்க முடியாமல் அழுது விட்டேன். அல்லல் பட்டு அழுத கண்ணீர்… என்ன செய்யும் என்று இந்த அறிவிலிக்கு கூடிய விரைவில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனது தாயார் உணர்த்துவார். அன்று நாம் சிரிப்போம் விரைவில்.
  3. வைரமுத்துவின் கள்ளி காட்டு இதிகாசம் படித்தவன் நான், ஆனால் இப்போது வைரமுத்து பேசியது முற்றிலும் தவறு, அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பேசுவதற்கு முன்னர் யோசிக்க தெரியாத கவிப்பேரரசா நீ?

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

’’தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.’’

இவ்வாறு வைரமுத்து சொல்லியுள்ளார்.