முகப்பு > மற்றவை > உடைப்பட்ட கோவிலுக்கு நீதி கேட்டு சனிக்கிழமை பொதுக்கூட்டம்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

உடைப்பட்ட கோவிலுக்கு நீதி கேட்டு சனிக்கிழமை பொதுக்கூட்டம்!

ஜொகூர், செரி அலாமிலுள்ள சின்ன கருப்பர் ஆலயம்  தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நீதி கேட்டு  மக்கள் பொதுக்கூட்டம் ஒன்று வரும் சனிக்கிழமை 13.01.208 காலை 7 தொடங்கி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை வெறும் ஓர் இந்து ஆலயம் என்று மட்டுமே பார்க்காமல், இது இந்திய சமுதாயத்தின் மீது விழுந்த ஓர் அடியாக நினைத்து இந்தியர்கள் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று மலேசியத் தமிழர் குரல் இயக்கத்தின் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

2007-ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு அபலம்,  ஓர் இந்து கோவிலுக்கு ஏற்பட்டது. மீண்டும் இந்த நிலை தொடராது என்று நினைத்தால், இன்று அது மீண்டும் பொய்யக்கப்பட்டுள்ளது.

இதனைப் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தால், இனி வரும் காலங்களில் இன்னும் பல கோவில்களும் தமிழ்ப் பள்ளிகளும் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டு தமிழர்களின் அடையாளமே இல்லாமல் செய்துவிடுவார்கள் என்று  மலேசியத் தமிழர் குரல் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்து ஆலயங்களும் தமிழ்ப்பள்ளிகளும் இந்தியர்களின் அடையாளம். அந்த அடையாளத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டி,  வரும் சனிக்கிழமை பொது மக்கள் நீதி கேட்கும் இந்த பொது கூட்டத்தில் கலந்து ஆதரவு தர வேண்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.  இந்த கோவிலுக்கு மட்டும் இல்லாமல் மலேசியா முழுக்க ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் கூட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த ஆலயத்தை உடைப்பதற்கு 13ஆம் தேதி வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திடிரென வந்த அமலாக்கத் தரப்பினர்கள் அந்த ஆலயத்தின் நிர்வாகம், பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி உடைத்து சென்றதாக கூறப்படுகிறது.

அமலாக்கத் தரப்பினர்களால் இன்று உடைக்கப்பட்ட இந்த கோவில் குறித்து, வாட்சாப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் படங்களும் வீடியோவும் வைரலாகி வருகின்றன.

https://www.facebook.com/TamilarKural.Malaysia/?hc_ref=ARSMsARRNYXCqU7s4D5Av9FpLpS4XIflsU8jUyBihkmWL-QctwMVLbIuwtEA8snHdj0

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன