முகப்பு > விளையாட்டு > சன்சேசை வாங்குவதில் மென்செஸ்டர் யுனைடெட், மென்செஸ்டர் சிட்டி போட்டி !
விளையாட்டு

சன்சேசை வாங்குவதில் மென்செஸ்டர் யுனைடெட், மென்செஸ்டர் சிட்டி போட்டி !

லண்டன், ஜன.13-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் அர்செனல் கிளப்பில் விளையாடி வரும் அர்செனல் ஆட்டக்காரர் அலெக்சிஸ் சன்சேசை வாங்குவதில் மென்செஸ்டர் யுனைடெட்டுக்கும், மென்செஸ்டர் சிட்டிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் கூறுகின்றன.

கடந்த கோடை காலத்தில் சன்சேசை வாங்க மென்செஸ்டர் சிட்டி முன் வைத்த அழைப்புத் தொகையை அர்செனல் நிராகரித்தது. இந்நிலையில் ஜனவரி மாதம் 2 கோடி ஈரோ டாலரை அழைப்பு தொகையாக முன் வைத்து மென்செஸ்டர் சிட்டி பேச்சுகளைத் தொடங்கியுள்ளது.

எனினும் அர்செனல் 3 கோடியே 50 லட்சம் ஈரோ டாலரைக் கோருவதால் பேச்சுகள் இழுப்பறியில் உள்ளது. இதற்கிடையில் சன்சேசை வாங்க மென்செஸ்டர் யுனைடெட்டும் 2 கோடியே 50 லட்சம் ஈரோ டாலரை வழங்க முன் வந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆட்டக்காரரை வாங்க இரண்டு கிளப்புகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

அலெக்சிஸ் சன்சேசின் எதிர்காலம் குறித்து தம்மால் உறுதியாக கூற முடியாது என அர்செனல் நிர்வாகி ஆர்சன் வெங்கர் தெரிவித்துள்ளார். ஆனால் சன்சேசுக்கு நிகரான ஆட்டக்காரர் கிடைக்காத வரையில் அந்த ஆட்டக்காரரை விட்டுக் கொடுக்க முடியாது என்று வெங்கர் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

.”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன