புரோட்டோன் சாகா பெயரை வழங்கியவர் காலமானார்!

0
2

கோலாலம்பூர், ஜன. 13-
நாட்டின் தேசிய வாகன தொழில்துறை நிறுவனமான புரோட்டோனின் முதலாவது காருக்கு புரோட்டோன் சாகா என்ற பெயரை வழங்கிய முன்னாள் இராணுவ வீரரான இஸ்மாயில் ஜாபார் தனது 71 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

புரோட்டோனின் முதலாவது காருக்கு பெயரை வைப்பதற்காக கடந்த 1985ஆம் ஆண்டு அந்நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தியது. சுமார் 102,823 பேர் கலந்துக்கொண்ட இந்த போட்டியில் இஸ்மாயில் ஜாபார் வழங்கிய பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த பெயரை அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அதன் அறிமுக நிகழ்ச்சியில் அறிவித்தார்.

இந்நிலையில், அண்மையக் காலமாக வயது முதிர்வின் காரணமாக உடல்நிலைப் பாதிக்கப்பட்டிருந்த இஸ்மாயில் ஜாபார் நேற்று மாலை மணி 3.10 அளவில் அவரது இல்லத்தில் காலமானதாக அவரது மகன் முஹம்மட் சரிஃபுடின் தெரிவித்தார்.