சாலையில் பிளவு: ஜோகூர்-மெர்சிங் சாலை போக்குவரத்திற்காக மூடப்பட்டது

0
23

ஜோகூர் பாரு, ஜன 15-
மெர்சிங் தொழிற்பேட்டை பயிற்சி மையத்திலிருந்து 16ஆவது கிலோ மீட்டர் தொலைவில் சாலையில் ஏற்பட்ட பிளவின் காரணமாக ஜோகூர் இணைக்கும் பிரதான சாலை போக்குவரத்திற்காக மூடப்பட்டது.

70 மீட்டர் அகலம் 15 மீட்டர் ஆழத்திற்கு இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்தச் சாலையில் பிளவு ஏற்பட்டது. அச்சமயம் அவ்வழியே பயணித்த கார் அப்பள்ளத்தில் விழுந்ததில் 60 வயது முதியவர் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஷிரில் எட்வர்ட் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான அந்த மூன்று பேரும் சிகிச்சைக்காக மெர்சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மெர்சிங் அல்லது குவாந்தானுக்கு செல்லும் பயணிகளும் மெர்சிங்கிலிருந்து ஜோகூர் பாருவிற்கு செல்லும் பயணிகளும் மாற்று சாலையான ஜாலான் நித்தார் சாலையில் பயணிக்கும்படி ஆலோசனைகள் கூறப்படுகிறது.

இதனிடையே, பயணிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் பொருத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மெர்சிங் பொதுப் பணித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாற்று வழி சாலையில் பயணிகள் பாதுக்காப்பாக பயணிக்க வேண்டும் என்பதில் பொதுப் பணித் துறை இலாகா உறுதியாக இருக்கிறது.