அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அஸ்மின் அலியின் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியை ஏற்க மறுத்தார் மகாதீர்
முதன்மைச் செய்திகள்

அஸ்மின் அலியின் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியை ஏற்க மறுத்தார் மகாதீர்

கோலாலம்பூர், ஜன.15-
கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியை தன்னிடம் விட்டுக் கொடுக்க முன் வந்த டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் விருப்பத்தை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்துள்ளார்.

இந்தத் தொகுதிக்குப் பதிலாக லங்காவி, குபாங் பாசு மற்றும் புத்ரா ஜெயா ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட தாம் விரும்புவதாக துன் மகாதீர் தெரிவித்தார்.

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை என பார்டி பிரிபூமி மலேசியாவின் (பிபிபிஎம்) சித்தியாவாங்சா டிவிஷனைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இத்தொகுதியை எனக்கு விட்டுக் கொடுக்க முன் வந்ததற்கு மனமார்ந்த நன்றி இருப்பினும், நான் இந்த மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட ஆவலாய் இருக்கிறேன் என மகாதீர் கூறினார்.

கெஅடிலான் ஒப்புதல் அளித்தால் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து என் வசம் இருக்கும் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியை துன் டாக்டர் மகாதீருக்கு விட்டுக் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி தனது டுவீட்டர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அஸ்மின் 6,867 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2013ஆம் ஆண்டிலும் இத்தொகுதியை 4,734 வாக்குகள் பெரும்பான்மையில் தக்க வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன