அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கேமரன்மலை மஇகாவிற்கே!!
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கேமரன்மலை மஇகாவிற்கே!!

கோலாலம்பூர், ஜன. 15-

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை தனதாக்கிக் கொள்ளும் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இத்தொகுதி ம.இ.கா.விற்கே வழங்கபட வேண்டுமென்று பகாங் தேசிய முன்னணி பரிந்துரை செய்துள்ளது.

பகாங் தேசிய முன்னணியின் இந்த முடிவு, ஆலோசனையாக இருந்தாலும் பகாங் மாநில தேசிய முன்னணியின் முடிவை தேசிய முன்னணித் தலைமைத்துவம் முழுமையாக ஏற்றுக் கொள்ளுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பாரம்பரிய தொகுதிககளை மாற்றிக் கொள்வதை விட அதை நிலை நிறுத்துவதே சிறந்தது. உதாரணத்திற்கு பெரும்பான்மை மலாய்க்கார வாக்காளர்களைக் கொண்ட கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி ம.இ.கா.விற்கே ஒதுக்கப்பட வேண்டுமென டத்தோஸ்ரீ அட்னான் யாக்கோப் கூறினார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பகாங் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியல் குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பகாங் மந்திரிபுசாரும் மாநில தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ அட்னான் யாக்கோப் குறிப்பிட்டிருந்தார்.

தேசிய முன்னணி உயர்மட்டத் தலைமைத்துவத்திற்கு அனுப்பிய வேட்பாளர் பரிந்துரை பட்டியலில் கேமரன் மலை உட்பட அனைத்து 14 நாடாளுமன்றத் தொகுதிகளும் 42 சட்டமன்றத் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியிருந்தார். கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி ம.இ.கா.வின் தொகுதிகளில் ஒன்றாகும்.

2004ஆம் ஆண்டு கேமரன் மலை தொகுதி உருவாக்கப்பட்டது முதல் ம.இ.கா. போட்டியிட்டு வருகிறது. அத்தொகுதியில் 31,015 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், கேமரன்மலையில் தமது பிரசார பணிகளை தொடர்ந்து வருவதுவும் குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன