ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஸ்ரீ பந்தாய் பிபிஆர் அடுக்ககத்தில் மேலிருந்து வீசப்பட்ட நாற்காலி; இந்திய இளைஞர் பலி
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஸ்ரீ பந்தாய் பிபிஆர் அடுக்ககத்தில் மேலிருந்து வீசப்பட்ட நாற்காலி; இந்திய இளைஞர் பலி

கோலாலம்பூர், ஜன.15-

ஸ்ரீ பந்தாய் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பின் பிளோக் 102இல் மேல்மாடியிலிருந்து பொறுப்பற்ற சிலர் நாற்காலி ஒன்றை கீழே தூக்கி வீசியதில் அது இந்திய இளைஞரின் தலையில் விழுந்தது.

இதில் அந்த இளைஞர் சம்ப இடத்திலேயே துடிதுடித்து மாண்டதாக முகநூலில் அனா ஜாம் என்பவர் பதிவேற்றியுள்ளார்.

இறந்தவர் சத்திஸ்வரன் (வயது 15) என அடையாளம் கூறப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற சிலரின் இத்தகைய நடவடிக்கை ஓர் அப்பாவியின் உயிரைப் பறித்ததாகவும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் அவரது பதிவின் கீழ் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நெஞ்சை உலுக்கும் இந்த துயரச் சம்பவம் திங்கள்கிழமை இரவு மணி 8.15க்கு நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களைப் போலீஸ் தேடி வருவதாகவும் தற்போது தடயவியல் நிபுணர்கள் அங்கு சோதணையை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன