ரெதான் – தி சினிமா பியூப்பிள் சார்பில் இந்திரகுமார் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் ராஜ் இசையமைப்பில் அருண் விஜய், தன்யா, ஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘தடம்’.

இந்த படத்தின் முன்னோட்டமான டீசர் தற்போது வெளியீடு கண்டு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2012- ஆம் ஆண்டு இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் நடிகர் அருண்விஜய் கூட்டணியில் வெளிவந்த ‘தடயற தாக்க’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனங்கள் மூலமாகவும் பெரும் வெற்றி அடைந்தது.

இந்த வெற்றிக்கூட்டணியின் இரண்டாவது படமான தடத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிறைந்திருக்கும்  வேளையில் அதற்கான ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது இந்த டீசர்.

திரில்லர் மற்றும் ஆக்சன் காட்சிகளுக்காக படக்குழுவினர் அதிகம் மெனகெட்டு இருப்பதும் இந்த டீசரின் மூலம் தெரியவந்துள்ளது.  படக்குழு தற்போது இறுதிகட்ட படபிடிப்பில் மிகவும் மும்முரமாக இருக்கின்றனர். அதனையொட்டி இந்த டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.