புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > அஜித்திடம் இருந்து திருட விரும்புகிறேன் – ஒரு பிரபல நடிகர்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

அஜித்திடம் இருந்து திருட விரும்புகிறேன் – ஒரு பிரபல நடிகர்!

தமது குணத்தாலும் மனதாலும் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் அஜித்குமார். தல அஜித்தைப் பிடிக்காத பிரபலங்கள் இருக்க முடியாது. அவருடைய மாஸ், பைக் ஓட்டும் விதம், சினிமாவை தாண்டி அவர் செய்யும் நல்ல விஷயங்கள் என அஜித்திடம் பலருக்கு பல செயல்கள் பிடிக்கும்.

தற்போது தான் நடித்திருக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சியான் விக்ரமிடம், ஒரு நடிகரிடம் இருந்து ஏதாவது திருட வேண்டும் என்றால் எந்த நடிகர், என்ன திருடுவீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு விக்ரம், அஜித்திடம் இருந்து அவருடைய பைக் திருடலாம் என்று பதில் கூறியிருக்கிறார். அஜித்துடைய பைக் அவருக்கு மிகப் பெரிய கம்பீரம் என்றும் விகரம் வர்ணித்துள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன