பொங்கலுக்கு சினிமா விருந்தாக வந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தின் வெற்றியால் சூர்யாவும் அவரது ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கும் நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் சூர்யாவுடன் முக்கிய கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஒரு புறம் இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், மறுபுறம் பிரபல தொலைக்காட்சியின்  தொகுப்பாளினிகள் இருவர் அவரது உயரத்தை கிண்டலடித்துள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

கே.வி ஆனந்த் இயக்கும் அந்த படம் குறித்த தகவலை தொகுத்தளித்த நிவேதிதா மற்றும் சங்கீதா என்ற தொகுப்பாளினிகள் இந்த படத்தில் சூர்யாவுடன் அமிதாப்பச்சன் நடித்தால் சூர்யா ஸ்டூல் மீதேறி நின்றுதான் நடிக்கவேண்டும் என்றும் அமிதாப்பச்சனை உட்கார வைத்து நடித்தால் சரியாக இருக்கும் என்றும் கிண்டலடித்துள்ளனர்.

இதனால், சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி தொடர்ந்து விமர்சனங்களால் அவர்களைத் தாக்கி வருகின்றனர்.  சூர்யாவின் உயரத்தை கிண்டலடிக்கும் நெட்டிசன்களுக்கு ஏற்கனவே ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்ற “நாம் என்ன உயரம் என்பது முக்கியமில்லை, எந்த உயரத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம்” என்ற வசனம் பதிலடியாக இருந்துள்ள நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த இரு தொகுப்பாளினிகளுக்கும் சூர்யாவின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.