2018-ஆம் ஆண்டிற்கான மலாயா பல்கலைக்கழகத்தின் ஐந்தாம் தங்கும் விடுதியின் ஏற்பாட்டில் COLORFEST 2.0 எனும் நிகழ்ச்சி அடுத்த மாதம் அதாவது 24.02.2018 சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வின் முதன்மை நோக்கமானது (PRAISE EMMANUEL CHILDREN’S HOME) எனும் சிறுவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு நிதி திரட்டுவதே ஆகும்.
இந்திய கலாச்சாரத்தை வளர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக சக மாணவர்கள் ஓர் ஆரோக்கியமான முறையில் ஒருவருக்கொருவர் ஈடுபடுவதற்குத் தூண்டுகோலாகவும் இந்நிகழ்ச்சி ஒரு தளமாக அமைகிறது. இந்தியர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிற இன மக்களுக்குப் பரப்புவது இந்நிகழ்வின் மற்றுமொரு குறிக்கோளாகும்.
இந்நிகழ்ச்சி 2 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. COLORFEST 2.0 வில் முக்கிய நிகழ்வாகிய ஹோலி கொண்டாட்டம் காலை 8.30 மணியளவில் நடைப்பெறவுள்ளது. இக்கொண்டாட்டத்தில் மலாயா பல்கலைக்கழக மாணவர்களும் மற்ற பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர். ஹோலி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவிரும்புவோர் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை அணுகி நுழைவுச்சீட்டினை ரி.ம 5.00க்குப் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்ந்து, அன்றிரவு 6.30 இண்டர்வாசிட்டி நடனப்போட்டி நடைப்பெறவுள்ளது. இந்நடனப் போட்டியில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். ஆகவே, சிறுவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவும் நோக்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

