மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவேன் – ரிட்சுவான்

0
1

கோலாலம்பூர், ஜூலை.25 –

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற உலக பாரா திடல் தடப் போட்டியில், தேசிய பாரா விளையாட்டாளர் முஹமட் ரிட்சுவான் முஹமட் புசி , 100 மீட்டர் ( டி.36 ) பிரிவில் தங்கப் பதக்கம் வெல்வதில் தோல்வி கண்டார்.

எனினும் லண்டனில் தமக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைப் போக்கும் ஒரு களமாக , செப்டம்பர் மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டி அமையும் என முஹமட் ரிட்சுவான் தெரிவித்துள்ளார்.

லண்டனில் ஏற்பட்ட தோல்வியால் மனமுடைந்துப் போகவில்லை என தெரிவித்த ரிட்சுவன் மலேசியாவின் நற்பெயரை காக்க தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்துள்ளார்.

பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியில் சிறந்த அடைவுநிலையை வெளிப்படுத்த தாம் உறுதி கொண்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார். 2015 ஆம் ஆண்டில் டோஹாவில் நடைபெற்ற உலக பாரா திடல் தடப் போட்டியில் இதே பிரிவில் முஹமட் ரிட்சுவான் தங்கம் வென்றிருந்தார்.

இம்முறை அந்த தங்கப் பதக்கத்தை தற்காக்க முடியாமல் போனது குறித்து வருத்தம் அடைவதாக அவர் கூறினார். பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியில் 100, 200 மற்றும்400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக முஹமட் ரிட்சுவன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here