அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > குற்றத்தை மறுத்தார் ஜேபிஜே துணை தலைமை இயக்குனர்
முதன்மைச் செய்திகள்

குற்றத்தை மறுத்தார் ஜேபிஜே துணை தலைமை இயக்குனர்

புத்ராஜெயா, ஜூலை.25 – 

கடந்த ஆண்டில் அவரச தடத்தில் பயணம் செய்ததாக புத்ராஜெயா மஜிஸ்திரெட் நீதிமன்றத்தில்  தம் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து,  ஜேபிஜே எனப்படும் சாலை போக்குவரத்து துறையின் துணை தலைமை இயக்குனர் டத்தோ யூசோப் அயோப்  விசாரணை கோரியுள்ளார்.

கடந்த ஆண்டில் அக்டோபர் 7 ஆம் தேதி மாலை 6.27 மணி அளவில் புத்ராஜெயா புறவட்ட சாலையில் 58 வயதுடய டத்தோ யூசோப் இந்த குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டில் சாலை போக்குவரத்து சட்டத்தின் 119 பிரிவின் ( 1) ( c) பிரிவின் கீழ் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டாயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.

அரசாங்க துணை வழக்கறிஞர் , இசாட் பவ்சான் வாதியின் சார்பில் ஆஜராகிய வேளையில் பிரதிவாதியின் சார்பில்  டத்தோ பல்ஜிட் சிங் சித்து ஆஜராகினார்.

பொது சேவைத் துறையில் தற்போது பணியாற்றி வரும் யூசோப் மீது கடந்த ஜூலை 18 ஆம் தேதி புத்ராஜெயா மஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் இதே குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. அப்போது யூசோப்பின் சார்பில் அவரின் சிறப்பு அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 600 ரிங்கிட் அபராதம் விதித்தது.

எனினும் ஜூலை 21 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்ற ஆணையர் டத்தோ அப்துல் கரீம் இந்த வழக்கை மறு விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கில் யூசோப் நேரடியாக ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜூலை 18 ஆம் தேதி வழங்கப்பட்ட மஜிஸ்திரெட் தீர்ப்பை ரத்து செய்த அப்துல் கரீம் மற்றொரு மஜிஸ்திரெட் நீதிபதி முன்னிலையில் இந்த விசாரணை மீண்டும் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டார்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன